Ad Banner
Ad Banner
Ad Banner
 அரசியல்

ஜோகூர் தேர்தல் : வேட்புமனுத் தாக்கல் தினத்தின் ஒரு வாரத்திற்குள் வேட்பாளர்களின் பட்டியலை தே.மு இறுதி செய்யும்

04/06/2026 04:47 PM

புத்ராஜெயா, 04 ஜூன் (பெர்னாமா) -- ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தினத்திற்கு முன்னர், ஒரு வாரத்திற்குள், ஜோகூர் மாநிலத்தின் 56 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை தேசிய முன்னணி, தே.மு. இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள சிக்கல்களை விரைவில் தீர்ப்பதற்கு அவகாசம் அளிக்கும் நோக்கில், அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தேசிய முன்னணித் தலைவர், டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் வெற்றிபெறக் கூடிய, ஏற்றுக்கொள்ளக் கூடிய, பழைய மற்றும் புதிய முகங்களின் கலவையையும் உட்படுத்தும் 'WALI' என்ற கொள்கையை, தேசிய முன்னணி தொடர்ந்து நிலைநிறுத்தும் என்று அவர் கூறினார்.

''இதன் பொருள், இந்த மூன்று தத்துவங்களும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்பதாகும். மேலும், தற்போதுள்ள பதவிகளில் இருப்பவர்களுடன் புதிய முகங்களையும் இணைப்போம். இம்முறை ஜோகூர் மாநில புதிய தலைமைத்துவத்தில் புதிய முகங்களிள் இருக்கும் என்று நம்புகிறேன்,'' என்றார் அவர்.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் அஹ்மாட் சாஹிடி, அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)