இந்தியா, 30 ஜூன் (பெர்னாமா) -- அருணாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, அதன் அண்டை மாநிலமான அசாமில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
அருணாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம், அசாம் உட்பட வடகிழக்கு இந்தியாவின் பிற பகுதிகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தின் கெயி பன்யோர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருக்கிறன.
மேலும், குறைந்தது நால்வரை காணவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஆண்டுதோறும் பெய்யும் இத்தகைய கனமழை, பெரும் நிலச்சரிவுகளையும் திடீர் வெள்ளத்தையும் ஏற்படுத்துவதுடன், ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதும் குறிப்பிடத்தக்கது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)