Ad Banner
Ad Banner
 பொது

ரொஹிங்யா குடியேற்றக் கட்டமைப்பை இடிக்க இரண்டு வாரங்கள் ஆகலாம்

13/06/2026 05:41 PM

ஹுலு லஙாட், 13 ஜூன் (பெர்னாமா) -- சிலாங்கூர், ஹுலு லஙாட், தெகாலி, கம்போங் பாரு சுங்கை மகாவில் உள்ள ரொஹிங்யா குடியேற்றக் கட்டமைப்பை இடிக்க இரண்டு வாரங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்பகுதியின் பின்புறத்தில், அரசுக்குச் சொந்தமான நிலத்திலும் சில தனியார் நிலங்களிலும் உள்ள கட்டிடங்களை இடிக்கும் செயல்முறை தொடங்கப்பட்டதாக ஹுலு லஙாட் நாடாளுமன்ற உறுப்பினர் முஹமட் சானி ஹம்சான் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட அந்த மூன்று மாடிக் கட்டிடம், முழுவதுமாக தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டிருப்பதால், தற்போதைக்கு இடிக்கப்படாது என்று அவர் கூறினார்.

மேலும், அப்பகுதியின் பின்புறத்தில் உள்ள ஒற்றை மாடிக் கட்டிடத்தை இடிப்பதற்கு நில உரிமையாளருக்கு சுமார் இரண்டு வாரங்கள் தேவைப்படும்.

முன்னதாக, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதாக கூறப்படும் மூன்று மாடிக் குடியிருப்பு அல்லது அடுக்குமாடிக் கட்டிடம் அல்ல என்றும் முஹமட் சானி கூறினார்.

அந்த இடத்தில் பெர்னாமா மேற்கொண்ட கண்ணோட்டத்தில், நில உரிமையாளர் இன்று காலை மணி 9 முதல் இரண்டு தொழிலாளர்கள் மற்றும் அகழ்வு இயந்திரத்தைப் பயன்படுத்தி, அக்குடியிருப்புப் பகுதியில் உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதியை இடிக்கத் தொடங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)