ஈப்போ, ஜூன் 14 (பெர்னாமா) -- பேராக் மாநிலத்தின் 12 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் வளர்தமிழ் விழா நேற்று சனிக்கிழமை வெற்றிகரமாக நடைபெற்றது.
திருக்குறள் ஒப்புவித்தல், கவிதை மற்றும் பேச்சுப் போட்டி ஆகிய மூன்று பிரிவுகளை உட்படுத்தி நடத்தப்பட்ட இப்போட்டியில் பேராவில் 134 தமிழ்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று, தங்களின் மொழித் திறனை வெளிப்படுத்தினர்.
பேராக் கல்வி இலாகா மற்றும் பேராக் மாநில தலைமையாசிரியர் கழகத்தின் ஆதரவுடன் ஒவ்வோர் ஆண்டும் இப்போட்டி நடைபெற்று வருகிறது,
மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெறுவார்கள் என்று மாநில தலைமையாசிரியர் கழகத்தின் தலைவர் ஜெயகுமார் சபாபதி விளக்கினார்.
''26ஆம் ஆண்டு வளர்த்தமிழ் விழாவாக திகழ்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக திருக்குறள் ஒப்பித்தல், கவிதை மற்றும் பேச்சுப் போட்டி ஆகிய மூன்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெறுவார்கள்,'' என்றார் அவர்.
2026ஆம் ஆண்டுக்கான Fun Walk HAWANA நிகழ்ச்சியில், உடற்பயிற்சி, சுகாதாரப் பரிசோதனைகள், கண்காட்சி, பாரம்பரிய விளையாட்டுகள், வண்ணம் தீட்டும் நடவடிக்கை, ஐம்பதாயிரம் ரிங்கிட் மதிப்புள்ள அதிர்ஷ்டக் குலுக்கல் உட்பட பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
ஈப்போ, அரசினர் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற வட கிந்தா மாவட்ட அளவிலான வளர்தமிழ் விழாவில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
இதனிடையே, எதிர்வரும் ஜூன் 27ஆம் தேதி மஞ்சோங் மாவட்டத்திலுள்ள மகா கணேச வித்தியாசாலை தமிழ்ப்பள்ளியில் மாநில அளவிலான வளர்தமிழ் விழா நடைபெறவுள்ளது.
அதில் வெற்றி பெறும் மாணவர்கள் தேசிய அளவிலான வளர்தமிழ் விழாவில் பங்கேற்பார்கள்.
இவ்வாண்டின் தேசிய வளர்தமிழ் விழா ஜூலை 15, 16 மற்றும் 17ஆம் தேதிகளில் பேராக் மாநிலத்தில் செலாமா லாருட் மாத்தாங் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.
- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)