Ad Banner
Ad Banner
 விளையாட்டு

2026 உலகக் கிண்ணம்; மொரோக்கோவும் பிரேசிலும் சமநிலை

14/06/2026 06:38 PM

நியூ யார்க், 14 ஜூன் (பெர்னாமா) -- 2026 உலகக் கிண்ணம்...

இன்று காலை நடைபெற்ற C பிரிவு ஆட்டத்தில், மொரோக்கோவும் பிரேசிலும் 1-1 என்ற புள்ளிகளில் சமநிலை கண்டன.

இதன் வழி, உலகக் கிண்ண வரலாற்றில் தென் அமெரிக்க அணிக்கு எதிராக மொராக்கோ அணி அடித்த முதல் கோல் என்ற சாதனை பதிவானது.

அமெரிக்காவின் நியூ யார்க், ஜெர்சி அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தின், 21-வது நிமிடத்தில் மொரோக்கோவின் இஸ்மாயில் சைபாரி, தனது அணிக்கான முதல் கோலை அடித்து இச்சாதனையைப் பதிவுச் செய்தார்.

இதனால், மொராக்கோ முன்னிலை வகித்த வேளையில், அந்த வாய்ப்பை நீண்ட நேரம் நீடிக்க விடாமல் பிரேசில், அடுத்த 11 நிமிடங்களிலேயே, ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில்வினிசியஸ் ஜூனியர் அடித்த கோல் மூலம் ஆட்டத்தை சமநிலைப்படுத்தியது.

இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியதும் இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தின.

எனினும், இரு அணிகளின் தற்காப்பு அரண்களும் உறுதியாக செயல்பட்டதால், கோல் வாய்ப்புகள் முறியடிக்கப்பட்டன.

தொடர்ந்து, பல முயற்சிகளுக்கு மத்தியிலும் இரு அணிகளும் கோல் அடிக்கத் தவறியதால், ஆட்டம் சமநிலையில் முடிந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)