ஜோகூர் பாரு, 13 ஜூன் (பெர்னாமா) -- ரொஹிங்யா உட்பட அகதிகளை மூன்றாம் நாடுகளுக்கு மாற்றுவதற்கான ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர் ஆணையம், யு.என்.எச்.சி.ஆர்-இன் விகிதம் மிகவும் குறைவாக இருப்பதால், அவர்கள் நீண்ட காலமாக உள்நாட்டு மக்களுடன் தங்கியிருப்பதற்கான முக்கிய காரணமாகிறது.
அகதிகளைப் பதிவு செய்தல் மற்றும் அவர்களை மூன்றாவது நாடுகளில் குடியேற்றம் செய்தல் ஆகியவை யு.என்.எச்.சி.ஆர்-இன் முக்கியப் பொறுப்புகளாக இருந்தாலும், நாடு கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அந்த அமைப்பு வழங்கிய அகதி அட்டைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
அதன் விளைவாக, நிச்சயமற்ற குடியேற்றத்திற்கு தங்களுக்கான நேரம் வரை உள்ளூர் மக்களுடன் வாழும் சூழ்நிலையால், Rohingya அகதிகள் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் மலேசியா உள்ளதாக அவர் கூறினார்.
''யு.என்.எச்.சி.ஆர் முக்கியப் பணி இரு வகை. முதலாவதாக, பதிவு செய்வது; பின்னர், ஒரு மூன்றாவது நாட்டைக் கண்டறிவது. ஒரு மூன்றாவது நாட்டைத் தேடும்போது, அந்நாட்டில் இடம் கிடைப்பதற்கான விகிதமே, அந்த ஆணையமே அகதிகள் அட்டைகளை வழங்கும் போது மிகவும் குறைவாக உள்ளது. இதன் விளைவாக, இடம் கிடைப்பதற்காகக் காத்திருக்கும்போது, இந்த அகதிகள் மக்களின் மத்தியில் தவிக்கின்றனர்,'' என்றார் அவர்.
இன்று, ஜோகூர் பாருவில் நடைபெற்ற தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவனம், ஏ.ஏ.டி.கே ஏற்பாட்டிலான போதைப்பொருள் இல்லாத பயணம் எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)