Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

நம்பிக்கை கூட்டணியின் வெற்றிக்கு தொடர்ந்து பணியாற்றுவீர் - அமினுடின் ஹருன்

13/06/2026 06:21 PM

சிரம்பான், 13 ஜுன் (பெர்னாமா) -- இம்முறை நடைபெறும் 16-வது மாநிலத் தேர்தலில், போட்டியிட வேட்பாளராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், கட்சிக்குத் துரோகம் செய்யாதீர்கள்.

மாறாக, நெகிரி செம்பிலானின் மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய, தொடர்ந்து பணியாற்றும்படி, கட்சித் தலைவர்களுக்கும் கேந்திரத்திற்கும், மாநில நம்பிக்கை கூட்டணியின் தலைவர் டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹருன் அறிவுறுத்தினார்.

''இன்று நடந்தது எங்களுக்கு ஒரு சோதனை. இன்று நடந்ததை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இன்று எங்களுக்கு ஒரு சோதனையாக இருக்கலாம். இதற்குப் பிறகு நாங்கள் இன்னும் சிறப்பாகச் செயல்படுவோம். இதற்குப் பிறகு இன்னும் வலிமையாக இருப்போம். இதற்குப் பிறகு இன்னும் ஒற்றுமையாக இருப்போம். இந்த நாட்டை மேம்படுத்துவதில் இன்னும் அதிக நம்பிக்கையுடன் இருப்போம். இதுவே இந்த முறை எங்கள் இலக்கு,'' என்றார் அவர்.

நேற்றிரவு, நெகிரி செம்பிலான், சிரம்பானில் நடைபெற்ற நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் கேந்திரத் தொடக்க விழாவில் உரையாற்றியபோது அமினுடின் ஹருன் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

வெளி மாநிலங்களில் வசிக்கும் அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பு தினத்தன்று தங்களது கடமைகளை நிறைவேற்றுச் சொந்த ஊருக்கு திரும்பும்படி மாநில மந்திபு புசாருமான அவர் கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)