சென்னை, 27 ஜூலை (பெர்னாமா) -- தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் காலமானார்.
அவருக்கு வயது 73.
தமது தனித்துவ திரைக்கதை பாணியால், குணச்சித்திர நடிப்பால் நகைச்சுவை வசனங்களால், ரசிகர்களை வெகுவாக மகிழ்வித்த அவரின் மறைவு, இன்று திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
காலையில் நடைபயிற்சிக்கு சென்ற பாக்யராஜுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அவரின் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் உட்பட அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இருவாரங்களுக்கு முன்னர் தான் இவரின் குருநாதரான பாக்யராஜ் காலமானார்.
இப்போது அவரின் சிஷ்யரான பாக்யராஜ் மறைந்தது பேரதிர்ச்சியாக உள்ளது.
ஈரோடு மாவட்டம், வெள்ளாங்கோயில் கிராமத்தில் 1953-ம் ஆண்டு பிறந்த பாக்யராஜ், சினிமா ஆசையில் இயக்குனர் சுந்தர்ராஜனுடன் இணைந்து சென்னைக்கு வந்துள்ளார்.
அதன்பிறகு இருவரும் சினிமா வாய்ப்பு தேடி அலைந்தபோது, பாரதிராஜாவிடம் உதவியாளர் வாய்ப்பு கிடைக்க பாக்யராஜ் அங்கு சென்று இணைந்துள்ளார்.
பாரதிராஜாவின் முதல் திரைப்படமான 16 வயதினிலே படத்தில் உதவி இயக்குனராக இருந்த பாக்யராஜ் பின்னர், பாரதிராஜாவின் 4-வது படமான புதிய வார்ப்புகள் படத்தில் திரைக்கதை எழுதி அதில் நாயகனாகவும் அறிமுகமானார்.
பின்னர், பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் உள்ளிட்ட ஆரம்பகட்ட படங்களில் உதவி இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா என பல துறைகளில் பணி புரிந்தார்.
திரைக்கதையில் அசாத்திய ஞானம் படைத்த பாக்கியராஜ், முந்தானை முடிச்சு, தூரல் நின்னு போச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங், அந்த ஏழு நாட்கள், எங்க சின்ன ராசா , சின்ன வீடு, தாவணி கனவுகள் என எண்ணற்ற வெற்றிப் படங்களை தந்துள்ளார்.
பாக்யராஜின் கதைகள் பெரும்பாலும் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையைச் சுற்றியே இருக்கும்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால் தமது கலை வாரிசாகவும் பாக்யராஜ் அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.
இந்த ஆண்டில் ஜனவரி மாதம், தமிழ் திரையுலகில் பாக்யராஜின் 50 ஆவது ஆண்டு பொன்விழாவை குறிக்கும் வகையில் மாபெரும் விழா ஒன்று நடத்தப்பட்டது.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட பாக்யராஜின் மறைவு தமிழ் சினிமா துறைக்கு ஒரு பேரிழப்பாகும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)