Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

பொது போக்குவரத்து நிலையங்கள் இருக்கும் இடங்களில் மக்கள் வீடமைப்புத் திட்டங்கள்

28/06/2026 05:42 PM

கிள்ளான், 28 ஜூன் (பெர்னாமா) -- பொது போக்குவரத்து நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் இருக்கும் பிரசாரானா மலேசியா நிறுவனத்துக்கு சொந்தமான நிலங்களில் மக்கள் வீடமைப்புத் திட்டங்கள் நிர்மாணிக்கப்பட வேண்டும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

TOD எனப்படும் போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி திட்டம் என்ற அடிப்படையில் எல்.ஆர்.டி மற்றும் எம்.ஆர்.டி நிலையங்கள் அமைந்துள்ள போதுமான கார் நிறுத்துமிட வசதிகளுடன் அந்த வீடமைப்புத் திட்டம் நிர்மாணிக்கப்பட வேன்டும் என அவர் வலியுறுத்தினார்.

பிரசாரானா நிறுவனத்திற்குச் சொந்தமான விரிவான நிலங்களை, குறிப்பாக மக்கள் அதிகம் உள்ள நகர்ப்புற பகுதிகளில், மேம்பாட்டுப் பணிகளை விரைவுபடுத்துமாறு போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கிடம் தாம் வலியுறுத்தியதாக  டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்தார். 

அந்த நிலங்கள் காலியாக விடப்படாமல், மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]