Ad Banner
Ad Banner
 பொது

தேர்தல் பிரச்சாரத்தின்போது புதிய திட்டங்கள், கொள்கைகள் குறித்த அறிவிப்புக்கு அனுமதி இல்லை

30/06/2026 02:57 PM

கோலாலம்பூர், 30 ஜூன் (பெர்னாமா) --  எந்தவொரு தேர்தல் பிரச்சாரத்தின்போதும் புதிய திட்டங்கள் அல்லது கொள்கைகள் குறித்த எந்த அறிவிப்பும் அனுமதிக்கப்படாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

1954-ஆம் ஆண்டு தேர்தல் குற்றங்கள் சட்டம், சட்டம் 5 செக்‌ஷன் 24B-இன் கீழுள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப இவ்விவகாரம் அமைந்துள்ளதாக அவர் கூறினார்.

''ஆகவே, இது புதிய திட்டங்களுக்குப் பயன்படுத்தினால், ஒரு பிரச்சனை எழுப்பப்படுகிறது. ஏனெனில், இந்தத் திட்டம் தொடரப்படுகிறது. விதிமுறைகளின்படி, தற்போதுள்ள திட்டங்களைத் தொடர்வது உண்மையில் அனுமதிக்கப்படுகிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது ​​நகரம், மாநில அரசாங்கம் அல்லது மத்திய அரசாங்க அளவில் புதிய திட்டங்களை அறிவிக்க இந்தக் கேந்திரங்களைப் பயன்படுத்த முடியாது'', என்றார் அவர்.

எனினும், நடப்பிலுள்ள திட்டங்கள் அல்லது கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களை அறிவிப்பது, தேர்தல் விதிமுறைகளின்படி குற்றமாகாது என்று பிரதமர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)