சென்னை, 28 ஜூ (பெர்னாமா) -- மறைந்த பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜின் உடல், முழு அரசு மரியாதையுடன் இன்று சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக, பாக்யராஜின் மகன் சந்தானு அவரது உடலுக்கு இறுதி சடங்குகளை செய்த பின்னர், இந்திய நேரம் காலை மணி 11:20 அளவில், 72 குண்டுகள் முழுங்க இந்தியாவின் ஈடு இணையற்ற திரைக்கதை மன்னன் பாக்யராஜ் விடைபெற்றார்.
இயக்குநர், நடிகர், எழுத்தாளர், இசையமைப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் தமிழ் சினிமாவிற்கு பங்காற்றிய பாக்யராஜ் நேற்று மாரடைப்பால் காலமானார்.
அவரது மறைவுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று முதல்வர் விஜய் நேற்று அறிவித்தார்.
பாக்யராஜின் உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு அஞ்சலிக்காக வைக்கப்படிருந்தது.
பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு, இன்று அவரது உடல் காலை 9 மணிக்கு மேல் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பாக்யராஜ் உடல் அடங்கிய வாகனத்தில் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, மகள் சரண்யா, மருமகள் கீர்த்தி உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.
அவரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட வேளையில், அந்த ஊர்வலம் மிகுந்த மரியாதையோடும் உரிய பாதுகாப்போடும் ஏற்பாடு செய்யப்பட்டது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]