Ad Banner
Ad Banner
Ad Banner
 அரசியல்

ஜோகூர் மாநில தேர்தலில் தேசிய முன்னணி வாக்காளர்களின் நம்பிக்கையை பெறும் 

28/06/2026 05:58 PM

ஜோகூர் பாரு, 28 ஜூன் (பெர்னாமா) -- 56 தொகுதிகளிலும் வேட்புமனுத் தாக்கல் சுமுகமாக நடைபெற்ற போதிலும், 16-வது ஜோகூர் மாநிலத் தேர்தலில் தனது கட்சியை பலவீனமாக கருதுவதால், தேசிய முன்னணி, BN அதன் பிரச்சாரத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது.

ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் வாக்களிப்பு நாள் வரை, அவர்கள் தொடர்ந்து கடினமாக உழைத்து, முடிந்தவரை அதிக வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறுவார்கள் என்று, மாச்சாப் சட்டமன்ற தொகுதியின் BN வேட்பாளரும் ஜோகூர் மந்திரி புசாருமான டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸி நம்பிக்கை தெரிவித்தார். 

BN வேட்பாளருக்கான ஆதரவு நேர்மறையாக உள்ள நிலையில் அது அக்கூட்டணியின் வெற்றியாக மாறும் என்று, இன்று ஜோகூர், ஜோகூர் பாருவில் இருக்கும் சௌஜானா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் டத்தோ ஓன் ஹஃபிஸ் செய்தியாளர்களிடம் பேசினார். 

''தேசிய முன்னணி தேர்தல் அறிக்கையைப் பொறுத்தவரை, 2022-ஆம் ஆண்டில் நான் அறிவித்த 6 ஜோகூர் மஜு உந்துதல்களின் தொடர்ச்சியாகவே இதைக் காண்கிறேன். இது ஒரு தொடர்ச்சி. வீட்டுவசதித் திட்டம், ஜோகூர் இளைஞர் திட்டம் மற்றும் ஜோகூர் காசி (Kasih) உதவி ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் பல்வேறு முன்னெடுப்புகளைத் தொடர்ந்து வருகிறோம்,'' என்றார் அவர். 

மேலும், இம்முறை நடைபெறும் மாநில தேர்தல் அமைதியான மற்றும் நல்ல சூழலில் நடைபெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]