லாஸ் ஏஞ்சலஸ், 29 ஜூன் (பெர்னாமா) -- உலகக் கிண்ண வரலாற்றில் முதன் முறையாக சிறந்த 16 நாடுகள் சந்திக்கும் சுற்றுக்கு முன்னேறி கனடா சாதனைப் படைத்துள்ளது.
இன்று அதிகாலை, லாஸ் ஏஞ்சலஸ் அரங்கில் நடைபெற்ற 32 நாடுகள் சந்திக்கும் ஆட்டத்தில், தென்னாப்பிரிக்காவை 1-0 என்ற சொற்ப கோல் கணக்கில் வீழ்த்தி கனடா வரலாறு படைத்தது.
ஆரம்பம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை கையாண்டன.
ஆயினும், முதல் பாதியில் கனடாவே ஆதிக்கம் செலுத்தி, சில சிறந்த வாய்ப்புகளை உருவாக்கியது.
ஆனாலும், கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி கோலடிக்கத் தவறியது.
தென்னாப்பிரிக்காவின் கடுமையாகப் போராடினாலும், இரண்டாம் பாதி முழுவதும் கனடாவே சிறந்து விளையாடி கோல் போட்டது.
கனடாவின் வெற்றி கோல் இறுதிக் கட்டத்தின் கூடுதல் நேரத்தில் போடப்பட்டது.
இதற்கு முன்னர், 32 நாடுகள் சந்திக்கும் சுற்றுக்கு இரு அணிகளும் ஒருபோதும் முன்னேறவில்லை.
காலிறுதிப் போட்டியில் இடம் பிடிப்பதற்காக நெதர்லாந்து அல்லது மொரோக்கோவை கனடா அடுத்து எதிர்கொள்ளும்.
-பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)