Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

வெனிசுவேலாவில் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 1,450-ஆக அதிகரிப்பு

29/06/2026 08:00 PM

கராகஸ், 29 ஜூன் (பெர்னாமா) -- வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 450 ஆக உயர்ந்துள்ளது.

இச்சம்பவத்தில் மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ள வேளையில், பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் வரலாற்றிலேயே மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் இச்சம்பவத்தில், மருத்துவமனைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இதனிடையே, முதல் அமெரிக்க நிவாரண விமானம் Caracas-க்கு வருவதால், சுகாதாரம் மற்றும் பிற அடிப்படைத் தேவைகளுக்கு காத்திருக்கும் லட்சக்கணக்கானோர் நிம்மதியடைந்துள்ளனர்.

மேலும், மனிதாபிமான உதவிகளை வழங்கிய நாடுகளுக்கு அமெரிக்காவின் ஆதரவு பெற்ற வெனிசுலாவின் இடைக்கால அதிபர்  நன்றி தெரிவித்துள்ளார்.

அதோடு, உயிர் பிழைத்தவர்களைத் தேடும் நடவடிக்கைக்காக கட்டட இடிபாடுகளை அகற்றும் பணியில் அப்பகுதி மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கள் தொகை தரவுகள் மற்றும் சேதத்தின் அளவு குறித்த மதிப்பீட்டில், 67 லட்சத்து 60 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அனைத்துலக புலம்பெயர்ந்தோர் அமைப்பு கணித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால தங்குமிடம், சுத்தமான குடிநீர், தூய்மை வசதிகள், மருத்துவ சேவைகள், பாதுகாப்பு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான உதவி ஆகியவை தேவைப்படுவதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.


-பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)