உலகம்

பிரிட்டன்: நிதி & கல்வி அமைச்சர்கள் பதவி விலகல்

06/07/2022 05:54 PM

லண்டன், 06 ஜூலை (பெர்னாமா) -- பிரிட்டன் நிதி அமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித் ஆகியோர் பதவி விலகினர்.

இவர்களின் இந்த திடீர் அறிவிப்பு, அந்நாட்டின் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அமைச்சர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளைப் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் முறையாகக் கையாளவில்லை என்பதால் அவர்கள் இருவரும் பதவி விலகுவதாகக் கூறப்படுகிறது.

இதனால், போரிஸ் ஜான்சன் மீதான அரசியல் அழுத்தம் அதிகரித்துள்ளது.

இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் மற்றும் சஜித் ஜாவித்-க்கு பதிலாக புதிய அமைச்சர்களை போரிஸ் ஜான்சன் உடனடியாக நியமித்துள்ளார்.

புதிய நிதியமைச்சர் பதவிக்கு கல்வி அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்த நடின் சஹாவி நியமிக்கப்பட்டுள்ள வேளையில் பிரதமர் அலுவலக தலைமை நிர்வாகியாக பணியாற்றி வந்த ஸ்டீவ் பார்கலே சுகாதார அமைச்சராகப் பதவியேற்றார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)