COVID–19 NEWS   Owners of premises in buildings allowed to determine protocol on wearing of face mask at their venue - Johor Exco | Italy greenlights Omicron-adapted COVID-19 booster shots | New COVID-19 cases down 16.9 pct last week | Japan to simplify COVID-19 airport quarantine procedures | EMA endorses Omicron-adapted COVID-19 vaccines | 
விளையாட்டு

காமன்வெல்த்: தங்கத்தைத் தவறவிட்ட நாட்டின் முக்குளிப்பு வீரர்கள்

07/08/2022 07:55 PM

பர்மிங்காம், 07 ஆகஸ்ட் (பெர்னாமா) -- பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்லும் இலக்கை நாட்டின் முக்குளிப்பு வீரர்களான டத்தோ பண்டேலேலா ரினோங் - நூர் டபிதா சப்ரி தவறவிட்டனர்.

10 மீட்டர் பிரிவில், அவர்கள் நான்காவது இடத்தை மட்டுமே பிடிக்க நேர்ந்தது.

இரண்டு மற்றும் மூன்றாம் சுற்றுகளில் பண்டேலேலா ரினோங் - நூர் டபிதா சப்ரி ஜோடி அதிக புள்ளிகளைப் பெற்றது.

இருப்பினும், நான்காவது சுற்றில்  41.28 புள்ளிகள் பெற்று மிகக் குறைவான மதிப்பெண்ணைப் பதிவு செய்தனர்.

286.92 புள்ளிகளுடன் பண்டேலேலா - டபிதா ஜோடி ஐந்தாவது சுற்றை நிறைவு செய்தனர்.

''வழக்கமான பயிற்சியைப் போல் என்னால் செய்ய முடியும் என்று நம்புகிறேன். ஆனால் வெற்றி தோல்வி என்பது இயல்பு. சில நேரங்களில் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்கிறோம். அதை நேர்மறையாக எடுத்துக்கொண்டு முன்னேற வேண்டும்,'' என்று பண்டேலேலா கூறினார்.

ஆஸ்திரேலியா ஜோடி தங்கம் வென்ற வேளையில், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை உபசரணை நாடு தட்டிச் சென்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)