COVID–19 NEWS   Owners of premises in buildings allowed to determine protocol on wearing of face mask at their venue - Johor Exco | Italy greenlights Omicron-adapted COVID-19 booster shots | New COVID-19 cases down 16.9 pct last week | Japan to simplify COVID-19 airport quarantine procedures | EMA endorses Omicron-adapted COVID-19 vaccines | 
உலகம்

இலங்கையில் மின்சாரக் கட்டணம் உயர்வு

09/08/2022 09:20 PM

கொழும்பு, 9 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இலங்கையில், மின்சாரக் கட்டணத்தை 75 விழுக்காடு அதிகரிக்கும் பரிந்துரையை மின்சாரத்துறை கண்காணிப்பாளர் இன்று செவ்வாய்க்கிழமை அங்கீகரித்துள்ளார்.

ஆகஸ்ட் 10ஆம் தேதி அதாவது நாளை முதல் இந்த புதிய விலை அமல்படுத்தப்படவிருப்பதாக அந்நாட்டின் பொது வசதி ஆணையம், பி.யு.சி.எஸ்.எல் தலைவர் ஜனகா ரட்னாயகே தெரிவித்தார்.

இந்த கட்டண உயர்வின் வழி, மாதத்திற்கு 30 யூனிட் வரை மின்சாரத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் கட்டணம் ரூ. 198 அதிகரிக்கவிருக்கிறது..

60 யூனிட் வரை பயன்படுத்துபவர்களின் மாதாந்திர சராசரி கட்டணம் சுமார் ரூ.200-ஆக அதிகரிக்கப்படும்.

90 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களின் மின்சாரக் கட்டணத்தை 276 விழுக்காடாக அதிகரிக்குமாறு இதற்கு முன்னர் சிலோன் மின்சார வாரியம் விண்ணப்பித்திருந்தது.

அதற்கு, பி.யு.சி.எஸ்.எல் 125 விழுக்காட்டு உயர்வுக்கு அனுமதி அளித்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)