ரோம், மே 02 (பெர்னாமா) -- இத்தாலி, டஸ்கனி மாகாணத்தில் உள்ள பிசா மற்றும் லூக்கா நகரங்களுக்கு இடையே காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருவதால், இத்தாலியில் மூவாயிரத்து 500-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மான்டே ஃபேட்டா மலைக்கு அருகில் உள்ள San Giuliano Terme நகரம் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கு நிலைமை மோசமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
மக்கள் அங்கிருந்து வெளியேறும்படி உள்ளூர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ள நிலையில் பல உடற்பயிற்சி மையங்கள் தற்காலிக நிவாரண மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.
பிசா புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள மான்டே ஃபேட்டாவைச் சுற்றியுள்ள பகுதி, மலையேறும் நடவடிக்கைக்கு பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.
நிலைமை மிக மோசமானதாக உள்ளதாக அதன் அதிபர் யுஜேனியோ ஜியானி தெரிவித்தார்.
சில நாள்களுக்கு முன்னர் தொடங்கிய தீயை அணைக்கும் நடவடிக்கைக்கு உதவ இராணுவத்தினரும் களம் இறங்கியுள்ளனர்.
பலத்த காற்றின் காரணத்தால் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)