COVID–19 NEWS   Owners of premises in buildings allowed to determine protocol on wearing of face mask at their venue - Johor Exco | Italy greenlights Omicron-adapted COVID-19 booster shots | New COVID-19 cases down 16.9 pct last week | Japan to simplify COVID-19 airport quarantine procedures | EMA endorses Omicron-adapted COVID-19 vaccines | 
பொது

கள்ளப்பணப் பறிமாற்ற குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய முன்னாள் அமைச்சர் விடுவித்து விடுதலை

09/08/2022 09:36 PM

கோத்தா கினாபாலு, 09 ஆகஸ்ட் (பெர்னாமா) -- 87 லட்சத்து 50,000 ரிங்கிட் கள்ளப்பணப் பறிமாற்றம் செய்ததாக ஐந்து குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய சபா மாநில உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சின் முன்னாள் அமைச்சர் டத்தோ பீட்டர் அந்தோணியை கோத்தா கினாபாலு ஊழல் சிறப்பு நீதிமன்றம் இன்று விடுவித்து விடுதலை செய்தது. 

கடந்த 2014, 2016-ஆம் ஆண்டுகளில் தொஙொட் மாவட்டத்தில் ரிஸ்டாவிடம் நிலத்தை விற்றது வழக்கு இதுவாகும்.  

அதுமட்டுமின்றி, வழக்கறிஞர் ஒருவருடன் இணைந்து நம்பிக்கை மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டிலிருந்தும் மெலாலாப் சட்டமன்ற உறுப்பினருமான அவர் விடுதலைச் செய்யப்பட்டார். 

சம்பந்தப்பட்ட அவ்வழக்கு தொடர்பான அண்மைய நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, நீதிபதி அபு பக்கார் மானாட், பீட்டர் அந்தோனி மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுவித்து விடுதலை செய்ய தீர்ப்பளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)