லா குவைரா, 01 ஜூலை (பெர்னாமா) -- வெனிசுலாவைத் தாக்கிய இரண்டு தொடர்ச்சியான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கடந்த ஆறு நாட்களாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மூன்று வயது சிறுவன் வெற்றிகரமான மீட்கப்பட்டான்.
லா குவைரா பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் கிளைபர் மோரன் எனும் அச்சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டு, பின்னர் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டதாக, அந்நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் கூறினார்.
பாதிக்கப்பட்ட சிறுவனை மீட்கும் நடவடிக்கையை, ஜோர்டனை சேர்ந்த மீட்புக் குழுவினர் மேற்கொண்டதாகவும், தொடர் சிகிச்சைக்காக மருத்துவ மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, 3,300-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மீட்பு பணியாளர்கள் மற்றும் 45 அனைத்துலக தூதர்களின் ஆதரவுடன், 140 மோப்ப நாய்கள் மற்றும் 7 லட்சம் டன்களுக்கும் அதிகமான மனிதாபிமான உதவிகளுடன் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட 75, 238 குடும்பங்களுக்கு உதவி வழங்கப்பட்டதாக அவர் விவரித்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)]