விளையாட்டு

உலக கிண்ண காற்பந்து போட்டி- அர்ஜென்டினா முதல் ஆட்டத்திலேயே தோல்வி

23/11/2022 07:36 PM

கட்டார், 23 நவம்பர் (பெர்னாமா) -- 2022-ஆம் ஆண்டு உலக கிண்ண காற்பந்து போட்டியில், அர்ஜென்டினா தனது முதல் ஆட்டத்திலேயே தோல்வி கண்டு அதன் ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் அர்ஜென்டினாவை 2-1 என்ற கோல்களில் சவூதி அரேபியா வீழ்த்தியதால், அந்நாட்டில் பொது விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.

ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் கிடைத்த பினால்டி வாய்ப்பை, அர்ஜென்டினாவின் நட்சத்திர ஆட்டக்காரர் லியோனல் மெசி கோலாக்கினார்.

முன்னணி வகித்தாலும், சவூதி அரேபியாவின் திறமையான ஆட்டத்தினால், அர்ஜென்டினா தனது முதல் ஆட்டத்திலேயே தோல்வியைப் பதிவு செய்தது.

மற்றொரு நிலவரத்தில், டி குழுவுக்கான ஆட்டத்தில், பிரான்ஸ் ஆஸ்திரேலியாவை 4-1 என்று தோற்கடித்தது.

முதல் பாதி ஆட்டத்தின் 9-வது நிமிடத்திலேயே தனது ஒரே கோலை அடித்து ஆஸ்திரேலியா முன்னணி வகித்தாலும், தொடர்ந்து இரண்டு கோல்களை அடித்து பிரான்ஸ் முன்னேறியது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் மேலும் இரு கோல்களை அடித்து பிரான்ஸ் ஆட்டத்தை முடித்து வைத்தது.

இதனிடையே, டி குழுவுக்கான மற்றொரு ஆட்டத்தில், டென்மார்க் மற்றும் துனிசியா இடையிலான ஆட்டம் கோல்கள் இன்றி முடிவடைய, மெசிக்கோவும் போலந்தும் சந்தித்த ஆட்டமும் கோல்கள் ஏதுமின்றி நிறைவுற்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)