Ad Banner
Ad Banner
 பொது

தாய்லாந்திலிருந்து கடத்தப்பட்ட 199,000 ரிங்கிட் மதிப்பிலான 'வேப்' சாதனங்கள் பறிமுதல்

21/06/2026 05:00 PM

கோத்தா பாரு, 21 ஜூன் (பெர்னாமா) -- கிளந்தான், ரந்தாவ் பாஞ்சாங், லுபோக் கொங் பகுதியில் உள்ள தெபு சட்டவிரோதப் படகுத்துறையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் தாய்லாந்து நாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்டதாக நம்பப்படும் 1,990 வேப் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இவற்றின் சந்தை மதிப்பு சுமார் 1 லட்சத்து 99,000 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சனிக்கிழமை பிற்பகல் மணி 2.30 அளவில் நடத்தப்பட்ட இச்சோதனை நடவடிக்கையை, ரந்தாவ் பாஞ்சாங் சுங்கத்துறையினரின் துணையோடு நடத்தப்பட்டதாக பொது நடவடிக்கை குழு, தெரிவித்தது.

கடத்தல் கும்பலால் தாய்லாந்திலிருந்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வேப் எனப்படும் மின்னணு சிகரெட்டுகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், எவரும் இதில் கைது செய்யப்படவில்லை. 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]