Ad Banner
Ad Banner
 பொது

உதவித் தொகை பெற்ற டீசலை வாங்க மைகார்டு அவசியம்

21/06/2026 06:05 PM

பிந்துலு, 21 ஜூன் (பெர்னாமா) -- ஜூலை முதல் உதவித் தொகை பெற்ற டீசலை ஒரு லிட்டர் இரண்டு ரிங்கிட் 10 சென் என்ற விலையில் வாங்குவதற்கு மைகார்டு (MyKad) அடையாள அட்டையைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

கோடி கணக்கான ரிங்கிட் இழப்புகளுக்கு வழிவகுக்கக்கூடிய எரிபொருள் கசிவு மற்றும் கடத்தலைக் கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம் என்று அவர் தெரிவித்தார். 

''ஏன் மைக்கார்டு என்று கேட்டால், காரணம் எரிபொருளின் கசிவும் கடத்தலும் மிக அதிகமாக உள்ளன. கிளந்தானுக்கு அல்லது தாய்லாந்திற்குச் செல்லும் எல்லை. கிளந்தானிலிருந்து தாய்லாந்திற்கு, அல்லது கெடா, பெர்லிஸிலிருந்து தாய்லாந்திற்கு மற்றும் சபா, சரவாக் எல்லைகளில் அதிகக் கசிவு நிகழ்கிறது,'' என்றார் அவர். 

டீசல் உதவித் தொகைக்கான இலக்கு நிர்ணயத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தத்தின் காரணமாக, சபா மற்றும் சரவாக்கில் சில்லறை டீசல் விலையும் ஒரு லிட்டருக்கு இரண்டு ரிங்கிட் 15 சென்னிலிருந்து இரண்டு ரிங்கிட் பத்து சென்னாக குறைக்கப்பட்டது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]