பிந்துலு, 21 ஜூன் (பெர்னாமா) -- வரும் ஜூலை முதலாம் தேதி தொடங்கி உதவித் தொகை வழங்கப்பட்ட டீசல், லிட்டருக்கு 2 ரிங்கிட் 10 சென்னாக விலைக் குறைக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தாமலும், உதவித் தொகைக்கான பயனை அவர்கள் முழுமையாகப் பெறுவதை உறுதி செய்யும் விதமாகவும், இலக்கிடப்பட்ட குழுக்களுக்கு மட்டுமே இத்திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்தினார்.
''முன்னதாக லிட்டருக்கு 2 ரிங்கிட் 15 சென் விலையில் விற்கப்பட்ட டீசல் தற்போது ஒரு லிட்டருக்கு 2 ரிங்கிட் 10 சென்னாக விலை குறைகிறது. இது அனைவருக்குமானது, குறிப்பாக சபா மற்றும் சரவாக் மாநில மக்களும் ஜூலை முதல் இந்த அனுகூலத்தில் பலனடையலாம்,'' என்றார் அவர்.
இன்று, சரவாக்கில், பிந்துலு துறைமுகத்திற்கான காசோலை ஒப்படைப்பு நிகழ்ச்சியில் உரையாற்றியபோது டத்தோ ஶ்ரீ அன்வார் அதனைத் தெரிவித்தார்.
மேலும், அனைத்து அம்சங்களும் இறுதி செய்யப்பட்ட பின்னர், இந்நடவடிக்கை துரிதமாக அமல்படுத்தப்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
அதோடு, ரோன்95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு 1.99 சென் என்ற அளவிலேயே தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் எனவும் பிரதமர் உறுதியளித்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]