GE15 NEWS   Kudat Independent MP backs unity government | Hamas leader congratulates Anwar on appointment as PM | GRS will abide by Agong 's decision on formation of unity govt - Hajiji | Zahid, Wan Azizah, Loke win while Saifuddin, Rezal Merican lose | 
உலகம்

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்

25/11/2022 08:00 PM

இந்தோனேசியா, 25 நவம்பர் (பெர்னாமா) -- இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், அதன் தாக்கத்திலிருந்து தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

தங்களுக்கு அரசாங்கத் தரப்பிலிருந்து எவ்வித உதவியும் இதுவரை கிடைக்கவில்லை என்று அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட, ரிக்டர் அளவைக் கருவியில் 5.6ஆக பதிவாகிய நிலநடுக்கத்தில் குறைந்தது 272 பேர் பலியாகினர்.

அந்த நிலநடுக்கத்தில், தங்களின் வீடுகளை இழந்தவர்கள் அதன் இடிபாடுகளிலிருந்து துணிமணிகளையும் இதர உடமைகளையும் தேடி எடுத்து தாங்கள் வசிக்கும் முகாம்களுக்கு கொண்டு செல்கின்றனர்.

உறவினர்களுடன் முகாம்களில் வசிக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மக்களிடமிருந்து உணவும் நீரும் கிடைத்து வருகின்றது.

எனினும், தினசரி வாழ்க்கையை நகர்த்த தேவையானப் பொருட்கள் கிடைப்பதிலேயே அவர்கள் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

நிலச்சரிவு மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்பு ஆகியவை பொருட்களை வழங்குவதற்கான முயற்சிகளுக்கு தடையாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)