பொது

பிரதமர் நாளை தம்புனுக்குப் பயணம்

01/12/2022 07:43 PM

ஈப்போ, 1 டிசம்பர் (பெர்னாமா) -- பிரதமராகப் பதவி ஏற்று எட்டு நாட்களுக்குப் பின்னர் தாம் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி அடைந்த தம்புன் தொகுதிக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை பயணிக்கிறார். 

காலை 10 மணிக்கு பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் முய்ஸுடின் ஷாவை, கிந்தா அரண்மனையில் 75 வயதுடைய அன்வார் சந்திக்கவிருக்கிறார்.

மேலும் தமக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த தம்புன் மக்களுக்கும் ஆதாரவாளர்களுக்கும் நன்றி பாராட்டும் விதமாக தஞ்சோங் ரம்புத்தான்  சந்தைக்கு வருகைப் புரிந்து மக்களை சந்திக்கவிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து மஞ்சோயிலுள்ள சுகாதர சிகிச்சையக தளத்திற்கு வருகைப் புரிந்து அங்கு கட்டப்பட்டு வரும் கம்போங் மஸ்ஜிட் பள்ளிவாசாலைப் பிரதமர் பார்வையிடுவார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)