உலகம்

80 லட்சம் இந்திய ரூபார் மதிப்புடைய வைரம்; ஒரே இரவில் இலட்சாதிபதி குடும்பமானது தொழிலாளி குடும்பம்

27/07/2024 07:15 PM

மத்திய பிரதேசம், 27 ஜூலை (பெர்னாமா) -- இந்தியா, மத்திய பிரதேச மாநிலத்தின் பண்ணா மாவட்டத்தில் உள்ள தொழிலாளி குடும்பம் ஒன்று, ஒரே இரவில் இலட்சாதிபதி குடும்பமானது.

இவ்வாரத் தொடக்கத்தில் அங்குள்ள சுரங்கம் ஒன்றை தோன்றியதில், 80 லட்சம் இந்திய ரூபாய், அல்லது 95,000 அமெரிக்க டாலர் மதிப்பிலான வைரம் ஒன்று அவர்களுக்கு கிடைத்துள்ளது.

அந்த வைரக் கல்லை கண்டெடுத்த ராஜூ கோண்ட் எனும் நபரின் தந்தை அச்சுரங்கத்தைக் குத்தகைக்கு எடுத்திருந்தார்.

19.22 கேரட் எடைக்கொண்ட அவ்வைரக்கல் உயர்ந்த தரமுடையது என்று இரத்தின நிபுணர் அனுப்பாம் சிங் தெரிவித்துள்ளார்.

அது, கூடிய விரைவில் ஏலத்திற்கு விடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்திடமிருந்து அச்சுரங்கத்தைக் குத்தகைக்கு எடுத்து, கோண்ட் குடும்பம் கடந்த 15 ஆண்டுகளாக வைரங்களைத் தோண்டி வருகின்றனர்.

கடந்த காலங்களில் பலர் அப்பகுதியில் வைரக்கற்களை கண்டெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]