உலகம்

மணிலா பேரிடருக்கு பருவநிலை மாற்றமே காரணம் - ஃபெர்டினன்ட்

27/07/2024 07:18 PM

பிலிப்பைன்ஸ், 27 ஜூலை (பெர்னாமா) -- மணிலாவில் வீசிய Gaemi சூறாவளியைத் தொடர்ந்து பெய்த கனமழையால், அங்கு மிக மோசமான வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், பருவநிலை மாற்றமே இப்பேரழிவிற்கு முதன்மை காரணம் என்று, அந்நாட்டு அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜேஆர் கூறுகின்றார்.

அந்நாட்டில் நிகழ்ந்திருக்கும் மோசமான பேரிடரினால் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்த அறிக்கைகளை மட்டும் படிப்பதற்கு பதிலாக, நிலைமையை நேரில் சென்று பார்வையிட தாம் எண்ணம் கொண்டிருப்பதை மணிலாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட ஃபெர்டினாண்ட் தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கிய ஃபெர்டினாண்ட் முன்னதாக அப்பகுதிகளைப் பார்வையிட்டார்.

கேமி சூறாவளி அந்நாட்டின் கரையைக் கடக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

எனினும், இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

குறைந்தது 14 பேர் பலியான இப்பேரிடரினால்அங்கு அவசரகால நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)