விளையாட்டு

கோலாகலமாக தொடங்கியது 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டி

27/07/2024 07:25 PM

பாரிஸ், 27 ஜூலை (பெர்னாமா) -- 100 ஆண்டுகள் காத்திருப்பிற்குப் பின்னர், பிரான்ஸ் மீண்டும் ஒலிம்பிக் போட்டியை ஏற்று நடத்துகிறது.

பொதுவாக அரங்கில் ஏற்பாடு செய்யப்படும் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா, இம்முறை சீன் ஆற்றில் நடைபெற்று அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இம்முறை ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளருக்கும் பிரான்ஸ் மக்களுக்கும் அனைத்துலக ஒலிம்பிக் செயற்குழு தலைவர் தோமஸ் பாக் நன்றி தெரிவித்தார்.

சீன் ஆற்றில் 85 படகுகளின் வழி, இப்போட்டியில் கலந்து கொள்ளும் சுமார் 6,800 விளையாட்டாளர்களின் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

30 விளையாட்டுகளை உட்படுத்தி 236 போட்டிகளில் கலந்து கொள்வதற்காக, சீனா 405 விளையாட்டாளர்களை இம்முறை அனுப்பியுள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் நாட்டின் முதல் தங்கப் பதக்கத்தை வெல்லும் நோக்கில், மலேசியா பிரதிநிதித்து 26 விளையாட்டாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

பிரான்சின் தடகள வீராங்கனை மேரி-ஜோஸ் பெரெக் மற்றும் அந்நாட்டின் ஜுடோ வீரர் டெடி ரைனர் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தனர்.

1900-ஆம் ஆண்டு மற்றும் 1924-ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரான்ஸ் மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டியை ஏற்று நடத்துகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)