2024-ஆம் ஆண்டு பூமிபுத்ரா பொருளாதார காங்கிரசை பிரதமர் தொடக்கி வைத்தார்

14/02/2024 07:15 PM

புத்ராஜெயா, 14 பிப்ரவரி (பெர்னாமா) -- 2024-ஆம் ஆண்டு பூமிபுத்ரா பொருளாதார காங்கிரஸ், கே.இ.பி.-ஐ பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் புத்ராஜெயாவில் இன்று தொடக்கி வைத்தார்.

பூமிபுத்ரா தொழில்முனைவோரின் தயாரிப்பில் வெளியாகி, அனைத்துலக சந்தைக்குள் நுழைந்திருக்கும் மெகாமாட்டோ எனப்படும் இயங்குப்படம், பிரதமருக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இன்று தொடங்கி மார்ச் 31-ஆம் தேதி வரையில் நடைபெறவிருக்கும் கட்டுரை மற்றும் விமர்சனப் போட்டிக்கான முத்திரை, கருப்பொருள் மற்றும் விளக்கக் காணொளிகளும் இடம்பெற்றன.

இவ்வாண்டு நடத்தப்படும் இக்காங்கிரசில் கல்வி மறுசீரமைப்பு மற்றும் மனிதவளம், ஹலால் துறை நிலைப்பாடு, சபா சரவாக் பூமிபுத்ரா பொருளாதாரம் மற்றும் புதிய தொழில்நுட்பம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)