2023-இல் மலேசிய ஜிடிபி, 3.7 விழுக்காடாக உயர்வு

16/02/2024 07:53 PM


கோலாலம்பூர், 16 பிப்ரவரி (பெர்னாமா) -- கடந்தாண்டு நான்காம் காலாண்டில் மூன்று விழுக்காடு வளர்ச்சிக்குப் பின்னர், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஜிடிபி-இல் 3.7 விழுக்காட்டு உயர்வை மலேசியா பதிவு செய்துள்ளது.

பொருளாதார நடவடிக்கைகள் உட்பட தொடர்ந்து மீட்சிப் பெற்று வரும் தொழிலாளர் சந்தை ஆகியவை, அவ்வளர்ச்சிக்கு வித்திட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் பேங்க் நெகாரா மலேசியா, பிஎன்எம் தெரிவித்தது.

சவாலான வெளிப்புற சூழலைத் தொடர்ந்து 2023-ஆம் ஆண்டில் மிதமான வளர்ச்சியையே பிஎன்எம் அறிவித்தது.

எனினும், 2022-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 8.7 விழுக்காட்டு வலுவான வளர்ச்சியின் மூலம் அது சாத்தியமானது.

மாதாந்திர ஜிடிபி வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில், டிசம்பரில் அது 1.4 விழுக்காடாக பதிவாகியது.

நவம்பரில் பதிவான 3.8 விழுக்காடு மற்றும் அக்டோபரில் பதிவான 3.9 விழுக்காட்டைக் காட்டிலும் அது குறைவாகும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பலவீனமான ஏற்றுமதி சார்ந்த உற்பத்தித் துறையைத் தவிர்த்து, டிசம்பர் மாதத்தில் பள்ளி விடுமுறை குறைவாக இருந்ததும் இதற்குக் காரணம் என்றும் அது விவரித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)