பொது

கிளானா ஜெயா ரயில் பாதையில் தீ; இயல்பு நிலைக்குத் திரும்பிய இரயில் சேவைகள்

26/07/2024 07:35 PM

கோலாலம்பூர், 26 ஜூலை (பெர்னாமா) --  கிளானா ஜெயா இரயில் பாதையில் சிறிய தீ விபத்தொன்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, எல்ஆர்டி இரயில் சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. 

இன்று, மதியம் சுமார் 2.03 மணி தொடங்கி புத்ரா ஹைட்ஸில் இருந்து வரும் ரயில்கள் ஆரா டாமன்சாராவில் திரும்பும் என்றும், கோம்பாக்கில் இருந்து வரும் இரயில்கள் ஆசியா ஜெயாவில் திரும்பும் என்றும் தமது X தளத்தில் குறிப்பிட்டிருந்தது.

ஆரா டாமன்சாரா மற்றும் கிளானா ஜெயா இடையே செயல்படும் எல்ஆர்டி இரயில்கள், கிளானா ஜெயா மற்றும் ஆசியா ஜெயா இடையே ஒரே தண்டவாளத்தில் இயக்கப்படும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இதனிடையே,பிற்பகல் சுமார் 3.30 மணியளவில் தீ அணைக்கப்பட்டதாகவும் மாற்று இரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதாகவும் RAPIDKL வெளியீட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இரயில் தண்டவாளங்கள் தற்போது ஒழுங்குபடுத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

எனினும், RAPIDKL நிறுவனம் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டதுடன், பொறுமை காத்த பயணிகளுக்கு நன்றி தெரிவித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)