பொது

எட்டு பகுதிகளில் வெப்ப எச்சரிக்கையை வெளியிட்டுள்ள மெட்மலேசியா

26/07/2024 07:21 PM

கோலாலம்பூர், 26 ஜூலை (பெர்னாமா) -- தீபகற்ப மலேசியாவில் உள்ள எட்டு பகுதிகளில் வெப்ப வானிலை எச்சரிக்கையை மலேசிய வானிலை ஆய்வு மையம் மெட் மலேசியா வெளியிட்டுள்ளது.

பேராக்கில் இரண்டு பகுதிகளான லாருட் மாடாங் மற்றும் கோல கங்சார், கிளந்தானில்  கோலாக் கிராய் மற்றும் பஹாங்கிலுள்ள மூன்று பகுதிகளான ரவூப், தெமெர்லோ, மாரான், பெந்தோங் மற்றும் ரொம்பின்ஆகிய பகுதிகளோடு கோம்பாக்கிலும் முதல் வெப்ப எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் மெட் மலேசியா விவரித்திருந்தது.

இதனால் குறிப்பிட்ட அப்பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு பொதுமக்கள் தேவையற்ற வெளிநடமாட்டத்தைக் குறைத்து கொள்வதுடன், அதிகமாக நீர் அருந்த வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)