உலகம்

கலிபோர்னியாவில் மோசமடையும் வானிலை

21/02/2024 08:14 PM

லாஸ் ஏன்ஜல்ஸ், 21 பிப்ரவரி (பெர்னாமா) -- கலிபோர்னியாவின் பெரும்பான்மை பகுதிகளில் நேற்று தொடங்கி பலத்த காற்றும் கடும் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் மண்சரிவு, காற்று மற்றும் மழை போன்ற பேரிடர்களை இம்மாநிலம் எதிர்கொண்டிருந்தது.

தற்போது தென் கலிபோர்னியாவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வரும் நிலையில், பல இடங்களில் பலத்த காற்று வீசுவதாகப் பதிவாகியுள்ளது.

மேலும், அம்மாநிலத்தில் வடக்கே மலைப்பகுதிகளில் பனிச்சரிவு ஏற்படத் தொடங்கியுள்ளது.

சன் ஃபிரான்சிஸ்கோவில் பெய்த கனமழையாலும் நிலச்சரிவாலும் சாலை தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதனால், அங்குள்ள பல பகுதிகளில் வெள்ள எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7:00 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)