ஹனோய், 17 பிப்ரவரி (பெர்னாமா) -- குதிரை ஆண்டை வரவேற்கும் வகையில், உலகம் முழுவதும் சீனப் புத்தாண்டு மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகின்றது.
வியட்நாம் முழுவதும் சீனப் புத்தாண்டு பல்வேறு நகரங்களில் வண்ணமயமான வாணவேடிக்கைகளுடன் கொண்டாடப்படுகிறது.
சீனாவிலும், சீனர்கள் அதிகம் வாழும் கிழக்காசிய நாடுகளிலும், குடும்பத்தார் மற்றும் நண்பர்களோடு சேர்ந்து பாரம்பரிய உணவுகளை இப்பெருநாளின் போது உண்பது வழக்கமாகும்.
இதனிடையே, ரஷ்யா, மாஸ்கோவிலும் சீனப் புத்தாண்டு கலைக்கட்டியது.
இப்பெருநாள், இரண்டு வாரங்களுக்கு அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் வேளையில் அதற்காக வெளிப்புற கண்காட்சிகள், உணவு மற்றும் நினைவு பரிசுகளை விற்கும் சந்தைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் வழி, சீனர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை ரசிக்கும் வாய்ப்பினை பார்வையாளர்கள் பெற்றனர்.
மற்றொரு நிலவரத்தில், ஹொங் கோங்கில் சீன புத்தாண்டை முன்னிட்டு, மக்கள் திரளாக திரண்டு அகர்பத்திகளை ஏற்றி சீனக் கோவில்களில் தங்களின் பிரார்த்தனைகளை மேற்கொண்டனர்.
இக்கொண்டாட்டத்தை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில், பூக்களை வாங்க ஹாங்காங்கைச் சுற்றியுள்ள சந்தைகளில் மக்கள் குவிந்தனர்.
நிறைவாக, சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் அர்ஜெண்டினாவிலும் கவனம் ஈர்த்திருந்தது.
பியூனஸ் அயர்ஸ் நகரில் சில நாள்கள் நீடிக்கும், இக்கொண்டாட்டத்தில் பல்வேறு கலாச்சார, கலை நிகழ்ச்சிகள் உட்பட உணவு வகைகளும் இலவசமாக வழங்கப்பட்டன.
-- பெர்னாமா