Ad Banner
Ad Banner
 பொது

குவாந்தானில் கொலைச் சம்பவம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலி 

17/02/2026 08:02 PM

குவாந்தான் , பிப்ரவரி 17 (பெர்னாமா) -- பகாங், குவந்தானின் Lorong Cherating Damai பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இறந்த நிலையில் கிடந்ததை அடுத்து அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

காலை மணி ஏழுக்கு நிகழ்ந்த இச்சம்பவத்தில் 3 மற்றும் 4 வயதுடைய இரு சிறுமிகளுடன் அவர்களின் பெற்றோர் மற்றும் பாட்டி ஆகியோரே உயிரிழந்தவர்கள் என்று பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஶ்ரீ யஹ்யா ஒத்மான் தெரிவித்தார்.

முறையே 32 மற்றும் 28 வயதுடைய கணவன் மனைவி மற்றும் அவர்கள் பிள்ளைகளின் உடல்கள் படுக்கையறையில் கண்டெடுக்கப்பட்ட வேளையில், 55 வயதுடைய பாட்டியின் உடல் சமையலறையில் கண்டெடுக்கப்பட்டதாக  அவர் கூறினார்.  

தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வதற்கு முன்னதாக 32 வயதுடைய அவ்வாடவர் தனது மனைவி, தாயார் மற்றும் இரு பிள்ளைகளை, கத்தி என சந்தேகிக்கப்படும் கூர்மையான ஆயுதம் கொண்டு தாக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கிகப்படுகிறது.

சிலாங்கூரில், வேலையிலிருந்து விலகி ஒரு மாதத்திற்குப் பின்னர், தமது சொந்த வீட்டிற்கு குடிபெயர்ந்ததாகவும், ஒரு வாரத்திற்கு முன்புதான் குவந்தானில் பணி செய்யத் தொடங்கியதாகவும் தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இச்சம்பவத்திற்கான நோக்கம் இன்னும் விசாரணையில் உள்ளது.  

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)