ரிங்கிட் மதிப்பு குறைந்தாலும் வர்த்தக & முதலீட்டு இலக்கை அடைய முடியும்

22/02/2024 06:12 PM

கோலாலம்பூர், 22 பிப்ரவரி (பெர்னாமா) -- அமெரிக்க டாலரைக் காட்டிலும் ரிங்கிட்டின் தற்போதைய மதிப்பு குறைந்திருந்தாலும், 2024-ஆம் ஆண்டுக்கான வர்த்தக மற்றும் முதலீட்டு இலக்கை அடைய முடியும்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்குத் தொடர்ந்து பல காரணங்கள் இருந்தாலும், அவர்களின் முதலீட்டைத் தீர்மானிப்பதில் நீண்ட கால வாய்ப்புகளும் உள்ளதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

" ரிங்கிட் கோணத்தைப் பொருத்தவரை, நாம் மிகவும் போட்டியாற்றல் கொண்டவர்கள் தான். முதலீடு சற்று அதிகரிக்கும். இதற்கு காரணம் அவர்கள் அந்த முதலீடுகளுக்கான செலவுகள் குறைவாக இருப்பதைப் பார்ப்பார்கள். அதற்கு முக்கியக் காரணம் அவர் பங்குச் சந்தையிலோ அல்லது நிதியிலோ செயல்படவில்லை. அவர்கள் முதலீடு செய்வது, 10 அல்லது 20 ஆண்டுகள். எனவே, அவர்கள் நீண்டகால பொருளாதாரத்தைப் பார்க்கின்றனர். ரிங்கிட் நிலைத்தன்மையை நீண்டகால அம்சமாக பார்க்காமல், இதர அம்சங்களில் ஒன்றாக பார்க்கின்றனர். நாம் நிலைத்தன்மை கட்டத்தில் உள்ளோம்," என்று அவர் கூறினார்.

முதலீட்டு துறை நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு உந்துசக்தியாக இருப்பதை உறுதிச்செய்ய, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், முதலீட்டு இலக்கை இரண்டு மடங்காக அதிகரிப்பதில் அரசாங்கம் இனி கவனம் செலுத்தும் என்று தெங்கு சஃப்ருல் குறிப்பிட்டார்.

முதலீட்டு துறைக்கான அரசாங்கத்தின் திட்டம் குறித்த விரிவான விவரங்கள் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

இன்று, கோலாலம்பூரில், BYD Malaysia புதிய மின்சார வாகன முத்திரை, BYD SEAL-லை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் தெங்கு சஃப்ருல் தெரிவித்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7:00 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)]