உலகம்

ஊழல், அதிகார மீறல் இம்ரான் கான் மீது மீண்டும் குற்றச்சாட்டு

27/02/2024 08:43 PM

இஸ்லாமாபாத், 27 பிப்ரவரி (பெர்னாமா) -- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

தமது மூன்றாவது மனைவி, புஷ்ரா பிபி-உடன் இணைந்து, நில வடிவிலான கையூட்டு மற்றும் பிரதமராக இருக்கும்போது அதிகார மீறல் செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தம் மீது சுமத்தப்பட்ட அக்குற்றச்சாட்டை அவரின் மூன்றாவது மனைவி மறுத்து விசாரணைக் கோரினார்.

கடந்த பிப்ரவரி எட்டாம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில், அவரது ஆதரவாளர்கள் அதிகமான தொகுதிகளை வென்றததைத் தொடர்ந்து, இம்ரான் கான் மீது சுமத்தப்பட்டிருக்கும் புதிய குற்றச்சாட்டு அதுவாகும்.

71 வயதான கான், வேறு வழக்குகள் தொடர்பில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகள் உட்பட 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளிலும் கான் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனால், 10 ஆண்டுகளுக்கு, கான் அரசியலில் பங்கேற்க முடியாது.

இன்று நடைபெற்ற வழக்கு விசாரணை, பாதுகாப்பு கருதி சிறைச்சாலை கட்டத்தினுள் மேற்கொள்ளப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)