பொது

பொதுப்பணி அமைச்சின் 2,118 மேம்பாட்டுத் திட்டங்கள் நிறைவு

27/02/2024 08:45 PM

கோலாலம்பூர், 27 பிப்ரவரி (பெர்னாமா) -- 2023-ஆம் ஆண்டு பொதுப்பணி அமைச்சின் கீழ் 2,118 மேம்பாட்டுத் திட்டங்கள் முழுமையாக நிறைவுப் பெற்றன.  

772 மேம்பாட்டுத் திட்டங்கள் கட்டுமானத்தில் உள்ளதாகவும் 589 மேம்பாட்டுத் திட்டங்கள் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியுள்ளதாகவும் பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார். 

பராமரிப்புப் பணிகளில் உள்ள 9,349 திட்டங்களில் 8,851 முழுமைப் பெற்றுவிட்டதாகவும் 473 மூன்று கட்மானப் பணிகளில் உள்ளதாகவும், எஞ்சியவை அப்பணிகளைத் தொடங்கியுள்ளதாகவும் நந்தா மேலும் விவரித்தார். 

''பொதுப்பணி அமைச்சு எந்தவொரு பணியையும் செய்வதில்லை என்று சமூக ஊடகங்களில் நாங்கள் தொடர்ந்து புகார்களைப் பார்க்கிறோம். ஆனால், புள்ளிவிவரப்படி அமைச்சு பல பணிகளை நிறைவுச் செய்துள்ளது. நிலுவையில் உள்ள மேம்பாட்டுத் திட்டங்களைக் காட்டிலும் நிறைவடைந்த திட்டங்களே அதிகம்,'' என்றார் அவர். 

கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற மாவட்ட பொறியியலாளர்களுடனான பொது விவாத அமர்வில் கலந்து கொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)