உலகம்

பெரு: பொதுச் சுகாதார அமைப்பை மேம்படுத்தக் கோரி மறியல்

20/03/2024 07:32 PM

லிமா, 20 மார்ச் (பெர்னாமா) -- நாட்டின் பொதுச் சுகாதார அமைப்பை மேம்படுத்தக் கோரி பெரு முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் தற்காலிக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்

அந்நாட்டில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை நிலவுவதாக அவர்கள் குற்றம் சாட்டி இருக்கின்றனர்.

நாட்டின் மருத்துவத் துறையில் நிகழும் பிரச்சனைகளை பொதுவில் அம்பலப்படுத்துவதே இந்த மறியலின் நோக்கம் என்று மருத்துவ பணியாளர்கள் கூறினர்.

போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், நோயாளிகளின் மருத்துவச் செலவும் அதிகரிப்பதாக அந்நாட்டின் மருத்துவ கூட்டமைப்பு தலைவர் தெரிவித்திருக்கிறார்.

பெருவில் டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த 24 மணி நேர வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)