விளையாட்டு

உடனடியாக பதவி விலக கிம் பான் கோன் முடிவு

16/07/2024 07:33 PM

கிளானா ஜெயா, 16 ஜூலை (பெர்னாமா) -- தனிப்பட்ட பொறுப்பு காரணமாக, தேசிய காற்பந்து அணி தலைமை பயிற்றுநர் கிம் பான் கோன் உடனடியாக பதவி விலக அதிகாரப்பூர்வமாக முடிவெடுத்துள்ளார்.

இன்று நடைபெற்ற சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பில் மலேசிய காற்பந்து சங்கம், எஃப்.ஏ.எம் துணை தலைவர் டத்தோ முஹமட் யூசோப் மஹாடி அத்தகவலை உறுதிப்படுத்தினார்.

''பயிற்றுநர் உயர்மட்ட நிர்வாகத் தரப்பைச் சந்தித்து தனது விருப்பத்தைத் தெரிவித்து விட்டார். தமது அந்த எண்ணத்தைத் (பதவி விலகுவதை) தொடர வேண்டாம் என்று நாங்களும் பல முறை கேட்டுக் கொண்டோம். எனினும், 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடையும் தமது ஒப்பந்தக் காலத்தைக் குறைக்கும் முடிவில் அவர் உறுதியாக உள்ளார்,'' என்றார் அவர்.

டான் செங் ஹோவிற்கு பதிலாக தேசிய காற்பந்து அணியின் தலைமை பயிற்றுநராக பான் கோன் நியமிக்கப்படுவதாக 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி எஃப்.ஏ.எம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)