உலகம்

புதின் அரசியல் லாபம் தேடுவதாக வோலோடிமிர் புகார்

24/03/2024 05:22 PM

கீவ், 24 மார்ச் (பெர்னாமா) -- புதினின் குற்றச்சாட்டை உக்ரேன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி மறுத்திருக்கிறார்.

இச்சம்பவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி புதின், அரசியல் லாபம் தேடுவதாகவும் அவர் சாடியிருக்கிறார்.

தாக்குதல் நடத்தப்பட்டு பல மணி நேரம் கழித்தே, புதின் மக்களிடம் உரையாற்றியதை செலென்ஸ்கி சுட்டிக்காட்டினார்.

பல மணி நேரம் மௌனம் சாதித்த புதின், தற்போது உக்ரேன் மீது குற்றம் சுமத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்தார்.

உள்நாட்டில் ஏற்படும் குற்றச்செயல்களுக்கு பொறுப்பு ஏற்காமல், மற்றவர் மீது சுமத்துவதில்  ரஷ்ய அதிகாரிகள் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளதாகவும் செலென்ஸ்கி கூறினார்.

தாக்குதலுக்கு வழிவகுத்த பாதுகாப்பு அதிகாரிகளையே ரஷ்ய மக்கள் கேள்வி கேட்க வேண்டும் என்று செலென்ஸ்கி குறிப்பிட்டார்.

அந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு டாய்ஷ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)