உலகம்

மாஸ்கோ பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் நால்வர் மீது குற்றச்சாட்டு

25/03/2024 07:05 PM

மாஸ்கோ, 25 மார்ச் (பெர்னாமா) -- ரஷ்யா, மாஸ்கோவுக்கு அருகே இருக்கும் இசையரங்கில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் நால்வர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அந்த நால்வரை அழைத்து வரும்போது நீதிமன்றத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

குற்றம் சாட்டப்பட்ட நால்வரில் இருவரை இரண்டு மாதங்களுக்கு தடுப்பு காவலில் வைக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இவர்கள் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை வழங்கப்படும்.

வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 130-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

அந்த தாக்குதலுக்கும் டயெஷ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருந்தாலும் உக்ரேனுக்கு இதில் தொடர்பு இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குற்றம் சாட்டியிருக்கிறார்.

அந்த குற்றச்சாட்டை உக்ரேன் மறுத்திருக்கிறது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]