விளையாட்டு

தனது புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியது ஜேடிதி

25/04/2024 06:44 PM

ஜோகூர் பாரு, 25 ஏப்ரல் (பெர்னாமா) -- 2024 மற்றும் 2025 சூப்பர் லீக் போட்டி மற்றும் ஆசிய லீக் போட்டிகளின், புதிய  பருவத்தில் களமிறங்குவதற்கு, ஜோகூரின் ஜேடிதி தனது புதிய ஜெர்சியை நேற்று அதன் அரங்கில்  அறிமுகப்படுத்தியது. 

சொந்த அரங்கில் விளையாடும்போது அணிந்துக்கொள்ள நீலம் மற்றும் சிவப்பு நிற ஜெர்சிகள்  வடிவமைக்கப்பட்டுள்ளது.  

அதேவேளையில், எதிரணியின் இடங்களில் விளையாடுவதற்கு வெள்ளை நிற ஜெர்சிகள் பயன்படுத்தப்படும் என்று JDT  தெரிவித்தது. 

தனது ரசிகர்களை கவர்வதற்காக, ஜேடிதி எப்போதும் புதிய ஜெர்சி வடிவமைப்பை கையாளும். 

ஜோகூர் கொடியின் பாரம்பரிய வண்ணங்களான சிவப்பு மற்றும் நீல நிறங்களை தொடர்ந்து பயன்படுத்தும் அது, இம்முறை புதிய பாணியில் அதனை பயன்படுத்தி வடிவமைத்துள்ளது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)