BREAKING NEWS   Selangor FC pulls out of 2024 Charity Shield match, stating it will not compromise on team safety | 
 உலகம்

அமெரிக்க நட்பு நாடுகளுக்கு நிதியுதவி; கையெழுத்திட்டுள்ளார் ஜோ பைடன்

25/04/2024 07:03 PM

அமெரிக்கா, 25 ஏப்ரல் (பெர்னாமா) -- நட்பு நாடுகளுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், 9,500 கோடி அமெரிக்க டாலர் உதவித் திட்டம் தொடர்பான மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

இதன் மூலம், உக்ரேன், இஸ்ரேல், இந்தோ - பசிபிக் வட்டார நாடுகளுக்கு அமெரிக்காவின் நிதியுதவி கிடைக்கும்.

கடந்த வாரம், அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியரசுக் கட்சியினர் கடுமையாக எதிர்த்தும் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஜனநாயக கட்சியினரைப் பெரும்பான்மையினராகக் கொண்டுள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டால் பட்டியலில் உள்ள நாடுகளுக்கு நிதி உதவி கிடைக்கும் என்று முடிவானது. 

அந்த மசோதாவை நிறைவேற்ற 6 மாதங்களாய் இழுபறி நீடித்த நிலையில், 
அமெரிக்க நாடாளுமன்றம் அந்த மசோதாவுக்கு நேற்று ஒப்புதல் அளித்தது.

ரஷ்யப் படையெடுப்பைச் சமாளிக்க உக்ரேனுக்கு சுமார் 6,100 கோடி அமெரிக்க டாலர் உதவி வழங்கப்படும் என்று ஜோ பைடன் கூறியுள்ளார். 

அதோடும், புதிய ஆயுதங்களும் சாதனங்களும் உடனடியாக உக்ரேனுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று அவர் கூறினார்.

காசாவில் ஹமாசுக்கு எதிரான போரை நடத்தும் இஸ்ரேலுக்கும் நிதி வழங்கப்படும். 

அதேவேளையல், பாலஸ்தீன வட்டாரத்தில் மனிதநேய உதவிகளைச் செய்வதற்கான உதவி நிதியும் அதில் அடங்கியுள்ளதாக பைடன் தெரிவித்தார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)