உலகம்

புலம்பெயர்ந்த பாலஸ்தீனர்களின் முகாம்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்; 20 பேர் பலி

22/06/2024 07:21 PM

காசா, 22 ஜூன் (பெர்னாமா) -- ரஃபாவுக்கு வடக்கே புலம்பெயர்ந்த பாலஸ்தீனர்களின் கூடார முகாம்கள் மீது இஸ்ரேலியப் படை வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததோடு, 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அச்சம்பவத்தில் பலியானோருக்கு இரங்கள் செலுத்துவதற்காக, கான் யூனிசில் உள்ள மருத்துவமனையில் அவர்களின் உறவினர்கள் ஒன்று கூடினர்.

கடலோரப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் இரண்டு கூடார முகாம்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஃபாவில் உள்ள பொது தற்காப்பு பிரிவின் பேச்சாளர் அஹ்மெட் ரட்வான் தெரிவித்தார்.

இஸ்ரேல் ஏற்படுத்தியிருக்கும் பாதுகாப்பு மண்டலத்திற்கு வெளியே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

10 லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் தஞ்சம் அடைந்திருக்கும் ரஃபாவில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருவதற்கு ஐநா தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)