உலகம்

இந்தியாவில் ஆண்டுக்கு 6 கோடி டன் கழிவுகள் உற்பத்தி

30/06/2024 08:05 PM

புது டெல்லி, 30 ஜூன் (பெர்னாமா) -- மத்திய அரசாங்கத்தின் தரவுகளின்படி, இந்தியா ஆண்டொன்றுக்கு குறைந்தது 6 கோடியே 20 லட்சம்  டன் கழிவுகளை உற்பத்தி செய்கிறது.

குப்பைக் கூளங்களால் நிறைந்திருக்கும் சில பகுதிகள், புதுடெல்லியில் உள்ள பால்ஸ்வா நிலப்பரப்பு போன்ற குப்பை மலைகளாக காட்சியளிக்கின்றன.

2016 ஆம் ஆண்டு குப்பைகளைத் தனித்தனியே பிரித்தெடுப்பதை சட்டம் கட்டாயமாக்கியது.

அபாயகரமான பொருட்கள் நிலப்பரப்புகளைச்ச் சென்றடைவதை அது வழிவகுக்காது.

இருப்பினும், அதன் அமலாக்கம் மோசமானதாக இருந்ததால், கழிவுகளை சேகரித்து விற்கும் மக்களின் ஆபத்தை அதிகரித்துள்ளது.

புதுடெல்லி மற்றும் பெருகிவரும் புறநகர் பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கானவர்களால் உற்பத்தி செய்யப்படும் நெகிழி, தொழில்துறை, மருத்துவம் மற்றும் பிற கழிவுகளால், மியாஸ்மா எனப்படும் நிலத்தில் இருந்து கிளம்பும் நச்சுத்தன்மை வாய்ந்த வாயு வெளியேறுகிறது.

ஆனால், கழிவுகளை சேகரித்து விற்பவர்கள், புகை மற்றும் மூச்சுத் திணறலையும் பொருட்படுத்தாமல், தங்களின் வாழ்வாதாரத்திற்காக விற்கக்கூடிய பொருட்களைத் தேடுகின்றனர்.

இந்தியாவில், ஏறக்குறைய 15 லட்சத்திலிருந்து 40 லட்சம் மக்கள்,  கழிவுகளைத் தேடி சேகரித்து அதனை விற்று தங்களின் வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.

பருவநிலை மாற்றம், அந்த அபாயகரமான வேலையை இன்னும் ஆபத்தானதாக மாற்றியுள்ளது.

வட இந்தியாவின் சமீபத்தில், வெப்ப அலையினால் இறந்தவர்களில், குறைந்தபட்சம் ஒரு நபர் கழிவுகளை சேகரிப்பவராக அடையாளம் காணப்பட்டுள்ளர்.


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)