பொது

இஸ்ரேல் நிறுவனங்கள் நாட்டில் செயல்படாமல் இருப்பதில் அரசாங்கம் உறுதி

21/06/2024 07:14 PM

பெட்டாலிங் ஜெயா, 21 ஜூன் (பெர்னாமா) -- இஸ்ரேலை சேர்ந்த எந்த நிறுவனத்தையும் நாட்டில் செயல்பட விடக்கூடாது என்று அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது.

இருப்பினும், இஸ்ரேலுடன் தொடர்பு அல்லது ஒத்துழைப்பைக் கொண்டிருக்கும் அந்நிய நிறுவனங்களின் வருகையை ரத்து செய்வதற்கான திறனை மலேசியா கொண்டிருக்கவில்லை,

ஏனெனில், அது நாட்டின் பொருளாதாரத்தை பாதிப்படையச் செய்யும் என்று அஞ்சப்படுவதாக, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கின்றார்.

இன்று, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள துன் அப்துல் அசிஸ் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அன்வார் அவ்வாறு கூறினார்.

இதனிடையே, ப்ளேக்ரோக் நிறுவனத்தின் செயல்பாடுகள் நாட்டில் இருப்பதாகவும், அது தொடர்ந்து தங்களின் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

வியாழக்கிழமை இரவில் கோலாலம்பூரில் 'TolakBlackRock' எனும் விவாத நிகழ்ச்சியில் முன்னாள் சுகாதார அமைச்சர், கைரி ஜமாலுடின் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் அன்வார் அவ்வாறு கருத்துரைத்தார்.

இதனிடையே, ப்ளேக்ரோக் விவகாரத்தை அவதூறு அம்சமாக பயன்படுத்தும் சில தரப்பினரை அன்வார் கடுமையாகச் சாடினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)