உலகம்

இரு ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்தது

01/07/2024 03:27 PM

சியோல், 01 ஜூலை (பெர்னாமா) -- வட கொரிய இன்று இரண்டு ஏவுகணகளை சோதனை செய்ததாகவும் அதில் ஒன்று வழக்கத்திற்கு மாறாக பறந்திருக்க சாத்தியம் உள்ளதாகவும் தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

தென் கொரியா மற்றும் ஜப்பானுடன் அமெரிக்கா மேற்கொள்ளும் புதிய கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு வட கொரியா உறுதிகொண்ட மறுநாள் இந்த ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வட கொரியாவில் உள்ள Jangyon நகரத்தில் இருந்து வடகிழக்கு திசையில் 10 நிமிட இடைவெளியில் இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாக கூட்டுப் படைத் தலைவர்கள் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

முதல் ஏவுகணை 600 கிலோமீட்டர் பறந்ததாகவும் இரண்டாவது ஏவுகணை 120 கிலோமீட்டர் பறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவை எங்கு தரையிறங்கின என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

ஏவுகணை வெடித்துச் சிதறியிருந்தால், அதன் பாகங்கள் தரையில் சிதறியிருக்கலாம்.

இருப்பினும், சேதம் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502