விளையாட்டு

கோபா அமெரிக்கா: பெருவை வீழ்த்தி அர்ஜெண்டினா முதலிடம்

30/06/2024 07:56 PM

அரிசோனா, 30 ஜூன் (பெர்னாமா) -- கோபா அமெரிக்கா கிண்ண காற்பந்து போட்டி

இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில், அர்ஜெண்டினா 2-0 என்ற நிலையில் பெருவை வீழ்த்தி A குழுவில், முதலிடத்தில் உள்ளது.

அர்ஜெண்டினாவின் இரு கோல்களையும் அதன் தாக்குதல் ஆட்டக்காரார் லோர்டாரோ மார்டினேஸ் 47 மற்றும் 86-வது நிமிடங்களில் அடித்தார்.

இந்த வெற்றியின் வழி, அர்ஜெண்டினா காலிறுதி ஆட்டத்திற்கு முன்னேறி உள்ளது.

கனடா இரண்டாவது இடத்திலும், சிலி மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.

இதனிடையே, A குழுவின் மற்றொரு ஆட்டத்தில், சிலியும் கனடாவும் கோல்கள் ஏதுமின்றி சமநிலை கண்டன.

ஆயினும் நான்கு புள்ளிகளோடு இரண்டாம் இடத்தில் இருப்பதால், கனடா கோபாவின் காலிறுதி போட்டிக்குத் தகுதிப் பெற்றுள்ளது.

வரலாற்றில் கோபா கிண்ணத்தை இரு முறை வென்ற சிலியும் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் பெருவும் போட்டியிலிருந்து விடைப்பெற்றன.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)